யாழ்தேவி.கொம் தன்னுடைய இரண்டாவது பதிப்பை புதிய பல வசதிகளுடன் வெளியிட்டுள்ளது. அதில், பதிவுகளை இணைப்பதற்கும் இலகுவான புதிய வழிகளை செய்துள்ளது.
பதிவுகளை இணைக்கும் முறை.
முதலில் உங்களது யாழ்தேவி கணக்கிற்குள் நுழையுங்கள். அதன்பின்னர் உங்களது கணக்கு பக்கத்தில் வலது மூலையில் ப்ரொபைல், ப்ளொக், லிங்க் என்கிற பகுதிகளை அவதானியுங்கள்.
அதில், பதிவுகளை இணைப்பதற்கு ப்ளொக் என்கின்ற பகுதியில் சொடுக்குங்கள். குறித்த பக்கம் கிடைத்தவுடன் அதில், உங்களது வலைப்பதிவின் முகவரி தெரியும்.
அதே பக்கத்தில் வலது பக்கத்தில் பச்சை நிறத்தில் இருக்கின்ற sync என்கின்ற பகுதியை சொடுக்குவதன் மூலம் உங்களின் அனைத்து பதிவுகளை யாழ்தேவி.கொம் உள்வாங்கிக்கொள்ளும். அதன்பின்னர் புதிதாக இணைக்கப்பட்டது எது, புதுப்பிக்கப்பட்டது எது என்பதை அந்தப்பக்கம் காட்டும்.
இப்பொழுது உங்களது பதிவுகள் அனைத்தும் உள்வாங்கப்பட்டு விட்டன. உங்கள் பதிவுக்கு அருகில் காணப்படும் மணல் கடிகாரம் பதிவு இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் முகப்பில் வெளியிடப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. அந்த மணல்கடிகார இணைப்பில் சொடுக்குவதன் மூலம் உங்கள் பதிவுக்கான நாட்டையும், வகையினையும் தெரிந்து Move online என்கிற பொத்தானை அழுத்துவதன் மூலம் பதிவை யாழ்தேவி முகப்புப் பக்கத்தில் வெளியிட முடியும்.