பத்திரிகையில் பொருந்தாத செய்தி ஒன்று வெளியாகும் போது அதை பார்த்துத் தாக்கமடைபவரின் உணர்வுவெளிப்பாடுகள் அவருடன் கூடச்சேர்ந்து பத்திரிகைவாசிக்கும் ஒரு மூன்று பேருடன் நின்றுபோய்விடுகிறது.அல்லது அவருடைய குடும்பஅங்கத்தவர்களுடன் அந்தத்தாக்கம் மட்டுப்படுத்தப்படுகிறது.வானொலியிலும் தொலைக்காட்சியின் தாக்கம் கூட அவ்வாறே.ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே அவற்றுக்கான தாக்கம் இருக்கிறது.
இணையம் அவ்வாறல்ல.இணையத்தில் பரப்பப்படும் செய்;திகள் நீண்ட ஆயுள் கொண்டவை.இலேசில் மரணித்துப்போகா.அவை பிழையான செய்திகளாக இருந்தாலும் கூட.இணையத்தின் பலம் அத்தகையது.இணையத்துடன் இணைந்த ஊடகங்களும் நீண்ட ஆயுள் கொண்டவையே.
• வலைப்பூக்கள் சமூக இணைப்புத்தளங்களின் வருகைக்குப்பின்னரான இணைய ஊடகங்களினால் சமூகத்தின் பால் ஏற்படுத்தப்படும் அழுத்தங்களின் வலிமை பற்றியும்
• அரசியல் கலாச்சார நடவடிக்கைகளில் எவ்வாறு பங்களிக்கப்போகின்றன ஏனைய நாடுகளில் எவ்வாறு தாக்கங்களை ஏற்படுத்தின
• இன்றய தமிழ்ச்சமூகங்களின் உலகநடப்புச்சம்பந்தமான அறிவு முன்னேற்றத்திற்கு இந்த ஊடகங்கள் எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு பயன்படுத்தப்படலாம்
• வலைப்பூக்களின் சாதக பாதகங்கள்
• வலைப்பதிவர்கள் எதிர்நோக்கும் நடைமுறைச்சிக்கல்கள்
• இலங்கை வலைப்பதிவர்கள்
• இலங்கை வலைப்பதிவர்களின் கல்வி மற்றும் துறைப்பின்னணிகள் எவ்வாறு துறைசார்ந்த ஆக்கங்களுக்கு உதவுகின்றன
• வருங்காலத்தில் பதிவுலகம்
• பதிவர் சமூகங்கள்
• பாடசாலைகளில் வலைப்பூஎழுத்துக்களை ஊக்குவித்தல்
• இரண்டாயிரத்து ஒன்பது இரண்டாயிரத்துப் பத்து மிகச்சிறந்த பத்துப்பதிவுகள்
• சிறந்த ஆக்கங்களை படைத்த மூன்று இலங்கைத்தமிழ் எழுத்தாளர்கள்
• இந்தியப்பதிவுலம்
போன்ற தலைப்புகளில் கலந்துரையாடல்கள் இடம்பெறும்.
வலைப்பூக்களில் மிகச்சிறந்த படைப்புக்களை தெரிந்து வெளியிடப்படும் "யாத்திரா 2010" வெளியீடும் இடம் பெறும்.
விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் பிரசுரிக்கப்படும்.யாத்ரா என்ற இந்த மாநாடு ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடைபெறும்
அன்புடன்
யாழ்தேவி நண்பர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்.