பத்திரிகையில் பொருந்தாத செய்தி ஒன்று வெளியாகும் போது அதை பார்த்துத் தாக்கமடைபவரின் உணர்வுவெளிப்பாடுகள் அவருடன் கூடச்சேர்ந்து பத்திரிகைவாசிக்கும் ஒரு மூன்று பேருடன் நின்றுபோய்விடுகிறது.அல்லது அவருடைய குடும்பஅங்கத்தவர்களுடன் அந்தத்தாக்கம் மட்டுப்படுத்தப்படுகிறது.வானொலியிலும் தொலைக்காட்சியின் தாக்கம் கூட அவ்வாறே.ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே அவற்றுக்கான தாக்கம் இருக்கிறது.
இணையம் அவ்வாறல்ல.இணையத்தில் பரப்பப்படும் செய்;திகள் நீண்ட ஆயுள் கொண்டவை.இலேசில் மரணித்துப்போகா.அவை பிழையான செய்திகளாக இருந்தாலும் கூட.இணையத்தின் பலம் அத்தகையது.இணையத்துடன் இணைந்த ஊடகங்களும் நீண்ட ஆயுள் கொண்டவையே.
• வலைப்பூக்கள் சமூக இணைப்புத்தளங்களின் வருகைக்குப்பின்னரான இணைய ஊடகங்களினால் சமூகத்தின் பால் ஏற்படுத்தப்படும் அழுத்தங்களின் வலிமை பற்றியும்
• அரசியல் கலாச்சார நடவடிக்கைகளில் எவ்வாறு பங்களிக்கப்போகின்றன ஏனைய நாடுகளில் எவ்வாறு தாக்கங்களை ஏற்படுத்தின
• இன்றய தமிழ்ச்சமூகங்களின் உலகநடப்புச்சம்பந்தமான அறிவு முன்னேற்றத்திற்கு இந்த ஊடகங்கள் எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு பயன்படுத்தப்படலாம்
• வலைப்பூக்களின் சாதக பாதகங்கள்
• வலைப்பதிவர்கள் எதிர்நோக்கும் நடைமுறைச்சிக்கல்கள்
• இலங்கை வலைப்பதிவர்கள்
• இலங்கை வலைப்பதிவர்களின் கல்வி மற்றும் துறைப்பின்னணிகள் எவ்வாறு துறைசார்ந்த ஆக்கங்களுக்கு உதவுகின்றன
• வருங்காலத்தில் பதிவுலகம்
• பதிவர் சமூகங்கள்
• பாடசாலைகளில் வலைப்பூஎழுத்துக்களை ஊக்குவித்தல்
• இரண்டாயிரத்து ஒன்பது இரண்டாயிரத்துப் பத்து மிகச்சிறந்த பத்துப்பதிவுகள்
• சிறந்த ஆக்கங்களை படைத்த மூன்று இலங்கைத்தமிழ் எழுத்தாளர்கள்
• இந்தியப்பதிவுலம்
போன்ற தலைப்புகளில் கலந்துரையாடல்கள் இடம்பெறும்.
வலைப்பூக்களில் மிகச்சிறந்த படைப்புக்களை தெரிந்து வெளியிடப்படும் "யாத்திரா 2010" வெளியீடும் இடம் பெறும்.
விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் பிரசுரிக்கப்படும்.யாத்ரா என்ற இந்த மாநாடு ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடைபெறும்
அன்புடன்
யாழ்தேவி நண்பர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்.
பின்னூட்டங்கள் "யாத்ரா 2010 " வெளியீட்டிலும் மற்றும் யாழ்தேவி உத்யோகபூர்வ இணையப்பக்கதிலும் வெளியிடப்படும்.
ReplyDelete-அன்புடன் யாழ்தேவி நண்பர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்குழு
அறிவித்தலில் முதல் பந்தியில் குறிப்பிட்டதைப் பார்த்ததுமே எனக்குத் தூக்கிவாரிப்போட்டது!
ReplyDeleteபத்திரிகையில் பொருந்தாத செய்தி ஒன்று வெளியாகும் போது அதை பார்த்துத் தாக்கமடைபவரின் உணர்வுவெளிப்பாடுகள் .....
ஆனால் நான் துணிந்து பத்திரிகைக்கு எழுதினேன்! நேரடியாகச் சென்று ஆசிரியர் பீடத்தினருடன் தர்க்கித்துக் கொள்வேன். என்போன்றோர் என்றோ எதிர்பார்த்ததை செயலுருப்படுத்தும் யாழ்தேவியினருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
தொடரட்டும் உங்கள் வீரம் நிறைந்த செயற்பணிகள்!
வரவேற்கிறோம்..
ReplyDeleteபத்திரிகை சுதந்திரம் சிறிலங்கா நாட்டில் என்ன கண்டிஷன்ல இருக்கெண்டு சொல்ல தேவேல்ல..
இணைய பதிவுகளை எரிக்க முடியாது..
பாராட்ட வயதில்லை..
வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் யாழ்தேவி...
ReplyDeleteவெற்றியடைய வாழ்த்துக்கள்...
மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeletegreetings for yaZhdevi.com
ReplyDeleteஅது என்ன தமிழ் இணைய மாநாட்டுக்கு ”யாத்திரா” என்டு சிங்கப் பெயரை வைச்சிருக்துறீங்கள். அதுவும் யாழ்ப்பாணத்தில் இது too much...
ReplyDeleteஅது என்ன தமிழ் இணைய மாநாட்டுக்கு ”யாத்திரா” என்டு சிங்களப் பெயரை வைச்சிருக்துறீங்கள். அதுவும் யாழ்ப்பாணத்தில் இது too much...
ReplyDeleteஇணைய தமிழ் யாழ்ப்பாணத்தில் சிறக்க எனது வழ்த்துக்கள்......ஆனால் பெயரை மற்றினால் இன்னும் சிறப்பக இருக்கும்
ReplyDeleteநல்லது எழுதுதுறையும் வாசிப்பும் நலிவடைந்ததால் தான் சிந்தனை அற்றசமுகம் உருவாகியுள்ளது ..உயர் பதவிகளில் உள்ளவர்களிடம் கேள்வி மட்டுமல்ல விடையையும் கொண்டு சென்றுதான் கேள்வி கேட்கவேண்டும் ..விடை தெரியதேன்றல் உரத்துப்பெசுவது தான் உயர் பதவியில் உள்ளவர்களின் தந்திரம்... இதற்கு காரணம் வாசிப்பு பழக்கம் அருகிப்போனமை தான்
ReplyDeleteநல்லது எழுதுதுறையும் வாசிப்பும் நலிவடைந்ததால் தான் சிந்தனை அற்றசமுகம் உருவாகியுள்ளது ..உயர் பதவிகளில் உள்ளவர்களிடம் கேள்வி மட்டுமல்ல விடையையும் கொண்டு சென்றுதான் கேள்வி கேட்கவேண்டும் ..விடை தெரியதேன்றல் உரத்துப்பெசுவது தான் உயர் பதவியில் உள்ளவர்களின் தந்திரம்... இதற்கு காரணம் வாசிப்பு பழக்கம் அருகிப்போனமை தான்
ReplyDeleteஉங்கள் நிகழ்ச்சிக்கு தமிழில் தலைப்பு வைப்பதையே தாழ்வாக கருதி சிங்களத்தில் தலைப்பினை வைக்கும் நீங்கள் யாழ்ப்பாணத்தில் தமிழ் இணைய மானாட்டினை நடதுவது கேளிக்ககைக்கூத்தாக இருக்கிறது. ”தென்னிலங்கைத் தமிழ் என்று ஒன்று இருப்பதை நான் இப்பொழுதுதான் தெரிந்து கொள்கின்றேன். அத்தமிழுக்கு சிங்களத்தில் அவ்வளவு மோகம்.” - நாம் சிங்களத்துக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் சிங்கள மக்களுக்கு அவர்களின் மொழியில் இருக்கும் ஆர்வம் தமிழராகிய உங்களுக்கு தமிழில் இல்லை. உங்கள் மானாடு என்ன நான்கு பணம் படைத்தவர்களின் வட்டமேசை மானாடுதானே. இதைத்தான் கொழும்பிலும் கொஞ்ச நாட்களுக்கு முதல் கண்டோம். என்று இந்த நாட்டில் பெரும்பாண்மை மக்கள் தமது கருத்துக்களை பயமின்றி வெளிட அனுதிக்கப்படுகின்றார்களோ அதன் பின்புதான் தமிழனை பற்றி பேசவேண்டும். ”பெருமாளே பிச்சை எடுக்கிறார் புசாரிக்கு புல்லட் கேக்குதா”
ReplyDeleteவாழ்த்துக்கள் யாழ் தேவி..,குழு!
ReplyDeletewel come
ReplyDeletegood
ReplyDelete