அறிக்கை
யாழ்தேவி நிர்வாகக்குழு பதிவர்கள் மற்றும் வாசகர்கSக்கு மற்றும் யாழ்தேவி திரட்டியில் ஈடுபட்டு உழைக்கும் அனைவருக்கும் மற்றும் இளைங்கலைஞர்வட்ட உறுப்பினர்கSக்கும் இந்த நற்செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
யாழ்தேவிஇணையம் தன்னுடைய சேவைஆரம்பித்த குறுகிய காலத்தில் ஒரு மைல்கல்லை எட்டியிருக்கிறது.இணைய ஊடகத்தை மற்றய ஊடகங்கSக்கும் மற்றய ஊடகப்பாவனையாளர்களை இணையத்துக்கும் அறிமுகப்படுத்தும் சவாலான பாதையில் குறிப்பிட்டளவு வெற்றிகண்டிருக்கிறோம்.
இலங்கையில்வெளியாகும் பாரிய வாசகர்வட்டத்தைக்கொண்ட 'தினக்குரல்' யாழ்தேவியுடன் கைகோர்க்க முன்வந்துள்ளது.இனி ஒவ்வொரு ஞhயிறு தினக்குரலிலும் யாழ்தேவிக்கான பக்கத்தில் எங்கள் பதிவர்களின் பதிவுகள் மின்னப்போகின்றன.அத்துடன் இலங்கையில் வெளியாகும் 'இருக்கிறம்" இருவார இதழும் யாழ்தேவிக்காக பக்கமொன்றை ஒதுக்கவும் யாழ்தேவி நட்சத்திரப்பதிவரின் தெரிந்தெடுக்கப்பட்ட ஆக்கம்ஒன்றை பிரசுரிக்கவும் முன்வந்துள்ளது.மீடியாக்களுக்காக யாழ்தேவியின் media.yaaldevi.com என்ற பகுதி புதிய பக்கம் விரைவில் அறிமுகமாகும்.
பெ.மயூரன்(வந்தியத்தேவன்)
யாழ்தேவி நிர்வாகக்குழு
ஆசிரியர்,
ஞயிறு தினக்குரல்.
வணக்கம்,
‘யாழ்தேவி’ திரட்டி, இணைய எழுத்தாளர்கள் மற்றும் தங்களின் (தினக்குரலின்) ஒத்துழைப்பு சம்பந்தமாக தங்கழுடன் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆக்கபூர்வமான சந்திப்பின் மகிழ்ச்சியுடன் இந்தக்கடிதத்தை எழுதுகிறேன். யாழ்தேவியுடன் தினக்குரல் இணைந்து இணையத்தில் எழுதும் எழுத்தாளர்களை பத்திரிகைத்துறைக்கு அறிமுகப்படுத்தும் ஆரோக்கியமான செயற்பாட்டுக்கு துணை நிற்க உறுதி அளித்தமைக்கு யாழ்தேவி சார்பிலும், அதன் நான்காயிரத்து சொச்சம் வாசகர்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு அச்சு ஊடகத்தின் துணையில்லாமல் இணைய ஊடகத்தையும், அதில் எழுதுபவர்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்த அல்லது மக்கழுடன் இணைக்க முடியாதென்பதை புரிந்துகொண்டு எங்களுடன் கைகோர்த்தமைக்கு தங்களுக்கும், தினக்குரலுக்கும் நன்றிகள்.
யாழ்தேவி திரட்டி அதாவது நாங்கள் செய்யவேண்டியதை இந்தக்கடிதத்தின் மூலம் தெளிவுபடுத்தலாம் என்று நினைக்கிறேன். தினக்குரல் யாழ்தேவிக்கு ஒதுக்க முன்வந்த அரைப்பக்கத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களை கீழே நிரல்படுத்தியிருக்கிறேன். வலைப்பூக்கள்- இணையத்தில் எம்மவர் என்ற தலைப்பின்கீழ் யாழ்தேவி நட்சத்திர பதிவரின் புகைப்படம், நட்சத்திரம் பற்றிய சிறிய அறிமுகம், அவருடைய பதிவுகள், குறித்த வாரத்தில் யாழ்தேவியில் பதியப்பட்ட ஆக்கங்களின் தொகுப்பு, யாழ்தேவியினால சிறந்த ஆக்கமாக தெரிந்தெடுக்கப்பட்ட ஆக்கம் ஒன்று. மேற்குறிப்பிட்ட ஒவ்வொன்றும் பதிவர்களை மேலும் எழுதத்தூண்டுவதாகவும், புதியவர்களை வலைப்பூக்கள் பக்கம் இழுத்து வரக்கூடியதாக காத்திரமானதாகவும், இளைமையானதாகவும் பிரசுரிக்கப்படல் வேண்டும். எங்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த கடிதத்தை நிறைவு செய்கிறேன்.
யாழ்தேவியின் விரிவுபடும் பணிகளுக்கு எமது வாழ்த்துக்கள்!
ReplyDeleteஎன்ன வந்தியரே! நீரும் இதில் இருக்கிறீரோ! இப்பதான் இந்தச் செய்தி எனக்குத் தெரியும்! உமக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்!
எமது வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நல்ல செய்தி...
ReplyDeleteஅதெவேளை பதிவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்க முன்வந்த தினக்குரலுக்கும் இருக்கிறம் சஞ்சிகைக்கும் எனது நன்றிகள்...
நிர்வாகக் குழுவில் இடம்பெற்ற வந்தியத் தேவன் அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்...
மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. யாழ்தேவியின் வெற்றிப் பயணத்திற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல திட்டம் ஆரோக்கியமான எழுத்துக்களை, எழுதுபவர்களை ஊக்கபடுத்துபவையாக இது அமையும்.
ReplyDeletekalaisolai
Bharathimohan
அன்புடன் யாழ் தேவி இணையத்தள உறுப்பினர்களுக்கு! நான் கமல்... தமிழ் மதுரம் எனும் வலைத்தளத்தை எழுதிவருபவன்... என்னுடைய வலைப்த் தளத்தைத் தங்களது திரட்டியில் பதிவு செய்த பின்னரும்.... என்னுடைய பதிவுகள் யாவும் தங்கள் வலைத் திரட்டியால் சேகரிக்கப்பட்ட பின்னர் யாழ்தேவி இணையத் தளத்தின் முகப்பில் பதிவாகவில்லை... தயவு செய்து எனது இந்தப் பிரச்சினையைச் சீர் செய்ய முடியுமா?? அன்புடன்.. கமல்..
ReplyDeleteதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
யாழ் தேவி இணையம் உலகம் எங்கும் பரவிட வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றியுடன் *உழவன் *
பாராட்ட வயதில்லை..
ReplyDeleteஆனாலும் வாழ்த்துகிறோம்..
வாழிய..
வாழிய நீடு!
ReplyDeletehttp://kalaimahanfairooz.blogspot.com
வாழ்த்துக்கள்
ReplyDelete