Tuesday, October 6, 2009

யாழ்தேவி இணையும் ஊடகங்கள்

அறிக்கை
யாழ்தேவி நிர்வாகக்குழு பதிவர்கள் மற்றும் வாசகர்கSக்கு மற்றும் யாழ்தேவி திரட்டியில் ஈடுபட்டு உழைக்கும் அனைவருக்கும் மற்றும் இளைங்கலைஞர்வட்ட உறுப்பினர்கSக்கும் இந்த நற்செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

யாழ்தேவிஇணையம் தன்னுடைய சேவைஆரம்பித்த குறுகிய காலத்தில் ஒரு மைல்கல்லை எட்டியிருக்கிறது.இணைய ஊடகத்தை மற்றய ஊடகங்கSக்கும் மற்றய ஊடகப்பாவனையாளர்களை இணையத்துக்கும் அறிமுகப்படுத்தும் சவாலான பாதையில் குறிப்பிட்டளவு வெற்றிகண்டிருக்கிறோம்.

இலங்கையில்வெளியாகும் பாரிய வாசகர்வட்டத்தைக்கொண்ட 'தினக்குரல்' யாழ்தேவியுடன் கைகோர்க்க முன்வந்துள்ளது.இனி ஒவ்வொரு ஞhயிறு தினக்குரலிலும் யாழ்தேவிக்கான பக்கத்தில் எங்கள் பதிவர்களின் பதிவுகள் மின்னப்போகின்றன.அத்துடன் இலங்கையில் வெளியாகும் 'இருக்கிறம்" இருவார இதழும் யாழ்தேவிக்காக பக்கமொன்றை ஒதுக்கவும் யாழ்தேவி நட்சத்திரப்பதிவரின் தெரிந்தெடுக்கப்பட்ட ஆக்கம்ஒன்றை பிரசுரிக்கவும் முன்வந்துள்ளது.மீடியாக்களுக்காக யாழ்தேவியின் media.yaaldevi.com என்ற பகுதி புதிய பக்கம் விரைவில் அறிமுகமாகும்.

பெ.மயூரன்(வந்தியத்தேவன்)
யாழ்தேவி நிர்வாகக்குழுஆசிரியர்,
ஞயிறு தினக்குரல்.

வணக்கம்,

‘யாழ்தேவி’ திரட்டி, இணைய எழுத்தாளர்கள் மற்றும் தங்களின் (தினக்குரலின்) ஒத்துழைப்பு சம்பந்தமாக தங்கழுடன் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆக்கபூர்வமான சந்திப்பின் மகிழ்ச்சியுடன் இந்தக்கடிதத்தை எழுதுகிறேன். யாழ்தேவியுடன் தினக்குரல் இணைந்து இணையத்தில் எழுதும் எழுத்தாளர்களை பத்திரிகைத்துறைக்கு அறிமுகப்படுத்தும் ஆரோக்கியமான செயற்பாட்டுக்கு துணை நிற்க உறுதி அளித்தமைக்கு யாழ்தேவி சார்பிலும், அதன் நான்காயிரத்து சொச்சம் வாசகர்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு அச்சு ஊடகத்தின் துணையில்லாமல் இணைய ஊடகத்தையும், அதில் எழுதுபவர்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்த அல்லது மக்கழுடன் இணைக்க முடியாதென்பதை புரிந்துகொண்டு எங்களுடன் கைகோர்த்தமைக்கு தங்களுக்கும், தினக்குரலுக்கும் நன்றிகள்.

யாழ்தேவி திரட்டி அதாவது நாங்கள் செய்யவேண்டியதை இந்தக்கடிதத்தின் மூலம் தெளிவுபடுத்தலாம் என்று நினைக்கிறேன். தினக்குரல் யாழ்தேவிக்கு ஒதுக்க முன்வந்த அரைப்பக்கத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களை கீழே நிரல்படுத்தியிருக்கிறேன். வலைப்பூக்கள்- இணையத்தில் எம்மவர் என்ற தலைப்பின்கீழ் யாழ்தேவி நட்சத்திர பதிவரின் புகைப்படம், நட்சத்திரம் பற்றிய சிறிய அறிமுகம், அவருடைய பதிவுகள், குறித்த வாரத்தில் யாழ்தேவியில் பதியப்பட்ட ஆக்கங்களின் தொகுப்பு, யாழ்தேவியினால சிறந்த ஆக்கமாக தெரிந்தெடுக்கப்பட்ட ஆக்கம் ஒன்று. மேற்குறிப்பிட்ட ஒவ்வொன்றும் பதிவர்களை மேலும் எழுதத்தூண்டுவதாகவும், புதியவர்களை வலைப்பூக்கள் பக்கம் இழுத்து வரக்கூடியதாக காத்திரமானதாகவும், இளைமையானதாகவும் பிரசுரிக்கப்படல் வேண்டும். எங்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த கடிதத்தை நிறைவு செய்கிறேன்.

Friday, October 2, 2009

யாழ்தேவி எழுத்துருமாற்றி

யாழ்தேவி எழுத்துருமாற்றியின் முதலாவது பதிப்பு 
இளம்கலைஞர்வட்டத்தினால் இன்று இரண்டாம் திகதி ஒக்டோபர் 
மாதம் இரண்டாயிரத்து ஒன்பதில் வெளியிடப்பட்டுள்ளது.

Monday, September 28, 2009

எஸ் எம் எஸ் புளொக்கிங்கை உங்கள் வலைப்பூவிலேயே இணைக்கிறது யாழ்தேவி.

(இந்த வசதியை அனுபவிப்பதற்கு நீங்கள் யாழ்தேவி மொபைல் புளொக்கர் அமைப்பை சரியாக செய்திருக்க வேண்டும். See this )

1.நீங்கள் உங்கள் தொலைபேசியின் மூலமாகவே உங்கள் சிறிய பதிவுகளைச்செய்யலாம்.
உங்கள் கடவுச்சொல்லைலைக்கொடுத்து யாழ்தேவியின் உங்கள் பகுதிக்குச்செல்லுங்கள்.

அங்கே 'எஸ் எம் எஸ் அப்டேற் உங்கள் வலைப்பூவில் என்ற பகுதி காணப்படும்.அதில் உள்ள எச் ரி எம் எல் நிரல்களை முழுவதுமாக கொப்பி செய்து கொள்ளுங்கள்.

2.உங்கள் புளொக்கின் கணக்கிற்குள் நுளைந்து டெம்ளெற்றை எடிற்செய்யும் பகுதிக்குச் செல்லுங்கள்

3.'அட் எ கஜட்' என்ற இணைப்பில் கிளிக்கி திறக்கும் விண்டோவில் 'வலைப்பூ எஸ் எம் எஸ் அப்டேற்;;' என்று தலைப்பிட்டு (உங்கள் விருப்பப்படி தலைப்பிடலாம்) பெரிய பெட்டியில் நீங்கள் கொப்பிசெய்த எச் டி எம் எல் நிரல்களை பேஸ்ட் செய்யுங்கள்.

4.சேமித்துவிட்டு வெளியேறுங்கள்.

5.உங்கள் வலைப்பூவின் முகப்பில் உங்கள் எஸ் எம் எஸ் அப்டேற்றுகள் தெரிய வேண்டும்

6.உயரம் தெரிய வேண்டிய அப்டேற்றுக்களின் எண்ணிக்கை என்பவற்றை நீங்கள் எச் டி எம் எல் நிரல்களை திருத்துவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்


Friday, July 24, 2009

நானும் மொபைல் றிப்போர்ட்டர் ஆகலாமா?


ஏன் இல்லை.நீங்கள் யாழ்தேவியில் பதியப்பட்ட பதிவராக இருந்தால் இது சாத்தியம்.உடனடியாக உங்கள் கணக்குப்பகுதிக்குச்சென்று உங்கள் மொபைல்இலக்கத்தை சர்வதேசவடிவத்தில் மாற்றுங்கள்.

உதாரணம்:

சாதாரண மொபைல் இலக்கம்: 0777699776 இதனை 94777699776 என்று மாற்றுங்கள்.கவனிக்க, இங்கு 94 சேர்க்கப்பட்டுள்ளது 0 விலக்கப்பட்டுள்ளது.
நீங்கள் லண்டனில் இருந்தால் 94 அல்லாமல் அது 44 ஆக இருக்கும்

அப்டேற்புறொபைல் என்ற பொத்தானை அழுத்தி கணக்கைசேமித்து வெளியேறுங்கள்.உங்கள் போனில் அனுப்பவேண்டிய செய்தியை உருவாக்கி அதனை 94114937071 என்ற இலக்கத்திற்கு அனுப்புங்கள்.யாழ்தேவி முகப்பில் உங்கள் செய்தி வருகிறதா என்று பாருங்கள்.நீங்களும் மொபைல் றிப்போர்ட்டர்தான். Enjoy :)

Friday, June 12, 2009


யாழ்தேவி கருவிப்பட்டி

யாழ்தேவி கருவிப்பட்டி யாழ்தேவி இணையத்தளத்தால் வழங்கப்படும் மேலதிக வசதியாகும்.இதை உங்கள் வலைப்பூவில் நிறுவிக்கொள்வதின் மூலம் உங்களது வாக்குகளை யாழ்தேவி இணையத்தளத்தில் இருந்து மாத்திரமல்ல உங்களது வலைப்பூவிற்கு நேரடியாக வருபவரும் செலுத்திக்கொள்ளமுடியும்.உங்களது பதிவினை மின்னங்சலாகவும் எஸ்எம்எஸ் ஆகவும் அனுப்பும் வசதியும் இதன் மூலம் கிடைக்கிறது.உங்களது பதிவுகளை பேஸ்புக்இணையத்தளத்தில் பகிர்ந்துகொள்ளவும் இது சந்தர்ப்பத்தை வழங்குகிறது

நிறுவிக்கொள்வது எவ்வாறு?

இதனை நிறுவிக்கொள்வது மிகவும் சுலபம்.இங்கு போய் உங்களுக்கு பிடித்த நிறத்தில் கருவிப்பட்டிக்கான நிரலைப்பெற்றுக்கொள்ளுங்கள்.படத்தில் காட்டியுள்ளவாறு படிப்படியாக பின்பற்றி நிரலைநிறுவிக்கொள்ளவும்.

வேட்பிரசுக்கும் இது பயன்படுமா?

வேட்பிரசுக்கான கருவிப்பட்டி இன்னும் சோதனைநிலையிலேயே உள்ளது.இன்னும் சில தினங்களில் அல்லது ஒருவாரத்தில் அதற்கான நிரல் உருவாக்கங்கள் முடிவடைந்து யாழ்தேவியில் அறுவிக்கப்படும்.அதற்கான நிறுவல்முறைகளுகம் இங்கு அறிவுறுத்தப்படும்

குறைகள்?

யாழ்தேவியின் இந்தக்கருவிப்பட்டை எனக்குப்பிடிக்கவில்லை.சில மாற்றங்கள் வசதிகளைப்பரிந்துரைக்க விரும்புகிறேன்.நான் என்ன செய்யவேண்டும்?
இங்கு போய் உங்களது எண்ணத்தை சிறுகருத்தாய் வெளியிடுங்கள்.அது எத்தகைய கருத்தாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

நான் ஒரு மென்பொருளாளர்

நானும் யாழ்தேவி மென்பொருள்குழுவில் இடம்பெறவிரும்புகிறேன்.நான் என்ன செய்யவேண்டும்.

பொறுமையாக இருங்கள்.இதற்கான அறிவிப்பு இன்னும் சிலவாரங்களில் அறிவிக்கப்படும்


Friday, May 22, 2009

யாழ்தேவி ஒரு மாதாந்த சஞ்சிகையாக வெளிவருகிறது.

கவிதையாக மாற உகந்த ஒரு காட்சி சொற்களால் பிடிக்கப்பட்டிருந்தால் தான் அது கவிதையாகியிருக்கிறது.அதில் இருக்கும் ஒரு சின்ன ஆச்சரியம் தான் அதை கவிதைக்கான கருவாக்கி வைத்தது.ஆச்சரியப்படாத அந்த நொடிப்பொழுது சொற்களில் நீண்டுவிடாத செறிவுதான் அதைக்கவிதையாக்குகிறது.

இப்படி கவிதையை வரைவிலக்கணப்படுத்த முடியுமா?

யாழ்ப்பாணத்தில் அப்பொழுது மல்லிகை என்ற சஞ்சிகை வந்து கொண்டிருந்தது.பல யாழ்ப்பாண இலக்கியக்கூட்டத்தின் பசியை அது தீர்த்து வைத்தது.ஆனால் இந்திய இலக்கிய பத்திரிகைகளால் பசியெடுத்த யாழ்பாண வாசகர்களில் எத்தனை பேரை அது தன்னுடைய சிறப்பம்சங்களால் ஈர்த்துக்கொண்டது என்று என்னால் கூறமுடியாது.ஆனால் இந்தியப்பத்திரிகைளி;ன் வரத்துக்குறைந்தவுடன் ஆவி குமுதம் வாசகர் வட்டத்தை மீறிய இலக்கிய ஆர்வலர்கள் மல்லிகையை நாடினார்கள்.ஏற்கனவே இருந்த எழுத்தாளர்களுக்கு மல்லிகை ஒரு தளமாக இருந்தாலும் புதிதாக சிருஷ்டிப்பவர்களை உருவாக்குவதில் அது எவ்வளவு தூரம் பங்களித்திருந்தது என்றால் அது குறைவு.

என்னுடைய ஏக்கமெல்லாம் இப்படியாக எழுதக்கூடியவர்களை எல்லாம் இலங்கையில் தேடிக்கண்டு பிடிக்கவேண்டும் என்பதுதான்.அதுதான் யாழ்தேவி என்று பத்திரிகை தொடங்க வேண்டும் என்கிற எனது ஆர்வத்தைக் கூட்டிக்கொண்டே இருந்தது.மண்டை நிறை இலக்கியப்பித்துடன் அதைப்பேசித்தீர்த்துக்கொள்ள யாரும் இல்லையென்று ஏங்கியிருக்கிறீர்களா? இப்படிவாருங்கள் நீங்கள் எனது ஜாதி.நல்ல திரைப்படம் நல்ல இசை நல்ல கவிதை நல்ல எழுத்துக்கள் என்று நீங்கள் ரசித்தவற்றையெல்லாவற்றையும் பற்றி ஒரு நாலுவரியாவது பகர்ந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் எங்களுக்கு நெருங்கி வந்து விட்டீர்கள்.யாழ்தேவியின் இன்னொரு முக்கியமான நோக்கம் இளைஞர்களின் எழுத்துக்களை ஊக்குவிப்பதாகும்.உயர்கல்வி கற்க்கும் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் எழுத்துக்களுக்கு யாழ்தேவி எப்போதும் முதலிடம் வழங்கும்.

சிறந்த உருவாக்குபர்களுக்கு இலங்கை பத்திரிகைளில் இடமில்லையா என்று நீங்கள் கேட்டால் நான் அடிவயிற்றைப்பிடித்துக்கொண்டு கத்திச்சொல்லுவென் ‘இல்லை என்று’.எங்கள் பத்திரிகைகளுக்கு வேறுவேலை இருக்கிறது. பழங்கதை பேசவும் படிப்பவர்களை உசுப்பவும்.

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை!

எப்படியிருக்கிறது எழுத்து..நாங்கள் இங்கே ஞானக்கூத்தர்களை உருவாக்க வேண்டுமானால் முதலில் ஏற்கனவே இருந்த ஞானக்கூத்தனின் நிழலையாவது காட்டினால்தான் அது முடியும்.அதற்கான தடயத்தை நான் பிறந்து இருபத்து நான்கு வருடங்களாகிறது இன்னும் பார்க்க முடியவில்லை இலங்கை பத்திரிகை உலகில்.சிலது அவ்வப்போது தலைகாட்டத்தான் செய்தன உதாரணம் அமுது.


இலங்கையில் பத்திரிகைத்துறையில் சஞ்சிகைகளில் முதலிடுவதென்பது காசை கோயில் உண்டியலில் போடுவதற்குச்சாமனம்.எங்களின் நோக்கம் யாழ்தேவி வெளியிடுவதன் மூலம் பணந்திரட்டுவதல்ல.அது முடியாத காரியமும் ஆகும்.யாழ்தேவி இணையத்தளத்தைபோலவே யாழ்தேவி சஞ்சிகையும் ஒரு லாபநோக்கற்ற தயாரிப்பாகவே இருக்கும்.முதன் முதலில் இதனை ஒரு மாதாந்தர சஞ்சிகையாக வெளியிடுவதுதான் எங்கள் நோக்கம்.அதன் விற்பனையைப்பொறுத்து அது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருதரமோ அல்லது மூன்று மாதத்திற்கொருதரமோ வெளியிடப்படலாம்.சிருஷ்டிகளின் தரத்தை அலசுவதற்கும் அச்சுக்கான ஆக்கங்களை பொறுக்கி எடுக்கவும் இளம் பத்திரிகையாளர்கள் அடங்கிய ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.தனி நபர் சார்ந்த விருப்பு வெறுப்புகளை தவிர்ப்பதுதான் இதன் நோக்கம்.புத்தக வெளியீட்டுக்கான எழுத்துக்கள் யாழ்தேவி பதிவர்களிடமிருந்தும் தபால் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் பெற்றுக்கொள்ளப்படும்.இதற்கான அறிவிப்புகள் யாழ்தேவி இணையத்தளத்திலும் மற்றும் யாழ்தேவி வலைப்பூவிலும் வெளியிடுப்படும்.

எங்களுக்கு உங்களுடைய உதவி நிச்சயமாகத்தேவை.பணம்தானே எல்லாவற்றுக்கும் அச்சாணி.உண்மையான தமிழ் எழுத்துகளில் சஞ்சிகைளில் ஆர்வம் உள்ளவர்கள் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.ஒரு வருட காலத்திற்கு நீங்கள் சந்தாதாரர்கள் ஆனாலே நாங்கள் புதுப்பலம் பெறுவோம். நின்மதியுடனும் தரத்துடனும் நாங்கள் உழைப்பதற்கு நிச்சயமாக அது உதவும். சந்;தாவுக்கான விபரங்கள் முதல் இதழ் வெளியானவுடன் அறிவிக்கப்படும்.

பார்ப்போம் எத்தனை முத்துலிங்கங்கள் கருணாகரமூர்த்திகள் ஷோபாஷக்திகள் உருவாகுகிறார்கள் என்று.


இது சம்பந்தாக உரையாட கருத்தை பகிர்ந்துகொள்ள விரும்புபவர்கள்
இந்த தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளலாம்

(+94)11 5 762401
(+94)77 7 699776

இலக்கம் 23 இரண்டாவது சப்பல் லேன்
வேள்ளவத்தை
கொழும்பு 6.
இலங்கை.

Saturday, April 11, 2009

www.Yaaldevi.com is launched today on new year.

யாழ்தேவி இன்று தமிழ்ப்புதுவருடம் 2009 வெளியிடப்பட்டிருக்கிறது.முற்றுமுழுதாக இலங்கைத்தமிழர்களுக்காகவும் இலங்கையில் இல்லாத புலம்பெயர்ந்த தமிழ் வலைப்பதிவர்களுக்காகவும் இந்த தளம் பயன்படும்.ஆனாலும் இதன் செயற்பாடுகள் முழுமையாகப்பரிசீலிக்கப்படவில்லை.இதன் நடைமுறைச்சிக்கல்களை விளங்கிக்கொள்ளவும் செயல்த்திறனைமேம்படுத்தவுமே இந்தவெள்ளோட்டம் .இதன் குறைநிறை மற்றும் ஆலோசனைகளை inquiry@yaaldevi.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள்