Friday, June 12, 2009


யாழ்தேவி கருவிப்பட்டி

யாழ்தேவி கருவிப்பட்டி யாழ்தேவி இணையத்தளத்தால் வழங்கப்படும் மேலதிக வசதியாகும்.இதை உங்கள் வலைப்பூவில் நிறுவிக்கொள்வதின் மூலம் உங்களது வாக்குகளை யாழ்தேவி இணையத்தளத்தில் இருந்து மாத்திரமல்ல உங்களது வலைப்பூவிற்கு நேரடியாக வருபவரும் செலுத்திக்கொள்ளமுடியும்.உங்களது பதிவினை மின்னங்சலாகவும் எஸ்எம்எஸ் ஆகவும் அனுப்பும் வசதியும் இதன் மூலம் கிடைக்கிறது.உங்களது பதிவுகளை பேஸ்புக்இணையத்தளத்தில் பகிர்ந்துகொள்ளவும் இது சந்தர்ப்பத்தை வழங்குகிறது

நிறுவிக்கொள்வது எவ்வாறு?

இதனை நிறுவிக்கொள்வது மிகவும் சுலபம்.இங்கு போய் உங்களுக்கு பிடித்த நிறத்தில் கருவிப்பட்டிக்கான நிரலைப்பெற்றுக்கொள்ளுங்கள்.படத்தில் காட்டியுள்ளவாறு படிப்படியாக பின்பற்றி நிரலைநிறுவிக்கொள்ளவும்.

வேட்பிரசுக்கும் இது பயன்படுமா?

வேட்பிரசுக்கான கருவிப்பட்டி இன்னும் சோதனைநிலையிலேயே உள்ளது.இன்னும் சில தினங்களில் அல்லது ஒருவாரத்தில் அதற்கான நிரல் உருவாக்கங்கள் முடிவடைந்து யாழ்தேவியில் அறுவிக்கப்படும்.அதற்கான நிறுவல்முறைகளுகம் இங்கு அறிவுறுத்தப்படும்

குறைகள்?

யாழ்தேவியின் இந்தக்கருவிப்பட்டை எனக்குப்பிடிக்கவில்லை.சில மாற்றங்கள் வசதிகளைப்பரிந்துரைக்க விரும்புகிறேன்.நான் என்ன செய்யவேண்டும்?
இங்கு போய் உங்களது எண்ணத்தை சிறுகருத்தாய் வெளியிடுங்கள்.அது எத்தகைய கருத்தாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

நான் ஒரு மென்பொருளாளர்

நானும் யாழ்தேவி மென்பொருள்குழுவில் இடம்பெறவிரும்புகிறேன்.நான் என்ன செய்யவேண்டும்.

பொறுமையாக இருங்கள்.இதற்கான அறிவிப்பு இன்னும் சிலவாரங்களில் அறிவிக்கப்படும்






2 comments:

  1. எனது பதிவுகளை யாழ் தேவியில் இணைக்க முடியவில்லை. நேறறு நான் உறுப்பினராகியதுக்கு மின்மடல் வந்து சேர்ந்தது. எனது நேற்றைய பதிவும் யாழ்தேவியில் இணைக்கப்பட்டு இருந்தது. பதிவுகள் தானாகவே இணைக்கபடுமா?

    ReplyDelete
  2. யாழ்தேவியில் நான் நீண்டநாள் அங்கத்தவன். இருப்பினும் என்னுடைய பதிவுகள் எதுவும் யாழ்தேவியில் கான்பதுக்கு இல்லை. நேற்று தான் உங்களுடைய கருவிபட்டையை எனது வலை தளத்தில் இட்டேன். அதன்பின் வாக்களிக்க முற்படும்போது அவ்வாறான பதிவு ஒன்று யாழ்தேவியில் இல்லை என்று வருகிறது. அதன் பின்னர் என்னுடைய பதிவை இடுகை செய்தும் பயனில்லை. காரணம் வாக்களிக்கமுடியவில்லை. பதிவுகள் எவ்வாறு சேர்க்கப்படுகிறது? என்னுடைய வலை தளமானது http://tnishan.blogspot.com ஆகும். இதுபற்றி எனக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete