
யாழ்தேவி நிர்வாகக்குழு

இலங்கைப்பதிவர்கள் யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் ,பேராசிரியர்கள் ,பாடசாலை மாணவர்கள் , அதிபர்கள் , கல்விமான்களுடன் , எழுதப்படிக்கத்தெரிந்த அனைவருடனும் யாழ்தேவி இணைந்து நடாத்தும் "யாத்ரா".முதலாவது இணையத்தமிழ் மாநாடு யாழ்ப்பாணத்தில் வரும் வைகாசிமாதம் 16ம் திகதி (May 16 sunday)ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. பத்திரிகையில் பொருந்தாத செய்தி ஒன்று வெளியாகும் போது அதை பார்த்துத் தாக்கமடைபவரின் உணர்வுவெளிப்பாடுகள் அவருடன் கூடச்சேர்ந்து பத்திரிகைவாசிக்கும் ஒரு மூன்று பேருடன் நின்றுபோய்விடுகிறது.அல்லது அவருடைய குடும்பஅங்கத்தவர்களுடன் அந்தத்தாக்கம் மட்டுப்படுத்தப்படுகிறது.வானொலியிலும் தொலைக்காட்சியின் தாக்கம் கூட அவ்வாறே.ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே அவற்றுக்கான தாக்கம் இருக்கிறது.
இணையம் அவ்வாறல்ல.இணையத்தில் பரப்பப்படும் செய்;திகள் நீண்ட ஆயுள் கொண்டவை.இலேசில் மரணித்துப்போகா.அவை பிழையான செய்திகளாக இருந்தாலும் கூட.இணையத்தின் பலம் அத்தகையது.இணையத்துடன் இணைந்த ஊடகங்களும் நீண்ட ஆயுள் கொண்டவையே.
• வலைப்பூக்கள் சமூக இணைப்புத்தளங்களின் வருகைக்குப்பின்னரான இணைய ஊடகங்களினால் சமூகத்தின் பால் ஏற்படுத்தப்படும் அழுத்தங்களின் வலிமை பற்றியும்
• அரசியல் கலாச்சார நடவடிக்கைகளில் எவ்வாறு பங்களிக்கப்போகின்றன ஏனைய நாடுகளில் எவ்வாறு தாக்கங்களை ஏற்படுத்தின
• இன்றய தமிழ்ச்சமூகங்களின் உலகநடப்புச்சம்பந்தமான அறிவு முன்னேற்றத்திற்கு இந்த ஊடகங்கள் எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு பயன்படுத்தப்படலாம்
• வலைப்பூக்களின் சாதக பாதகங்கள்
• வலைப்பதிவர்கள் எதிர்நோக்கும் நடைமுறைச்சிக்கல்கள்
• இலங்கை வலைப்பதிவர்கள்
• இலங்கை வலைப்பதிவர்களின் கல்வி மற்றும் துறைப்பின்னணிகள் எவ்வாறு துறைசார்ந்த ஆக்கங்களுக்கு உதவுகின்றன
• வருங்காலத்தில் பதிவுலகம்
• பதிவர் சமூகங்கள்
• பாடசாலைகளில் வலைப்பூஎழுத்துக்களை ஊக்குவித்தல்
• இரண்டாயிரத்து ஒன்பது இரண்டாயிரத்துப் பத்து மிகச்சிறந்த பத்துப்பதிவுகள்
• சிறந்த ஆக்கங்களை படைத்த மூன்று இலங்கைத்தமிழ் எழுத்தாளர்கள்
• இந்தியப்பதிவுலம்
போன்ற தலைப்புகளில் கலந்துரையாடல்கள் இடம்பெறும்.
வலைப்பூக்களில் மிகச்சிறந்த படைப்புக்களை தெரிந்து வெளியிடப்படும் "யாத்திரா 2010" வெளியீடும் இடம் பெறும்.
விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் பிரசுரிக்கப்படும்.யாத்ரா என்ற இந்த மாநாடு ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடைபெறும்
அன்புடன்
யாழ்தேவி நண்பர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்.
அறிக்கை
யாழ்தேவி நிர்வாகக்குழு பதிவர்கள் மற்றும் வாசகர்கSக்கு மற்றும் யாழ்தேவி திரட்டியில் ஈடுபட்டு உழைக்கும் அனைவருக்கும் மற்றும் இளைங்கலைஞர்வட்ட உறுப்பினர்கSக்கும் இந்த நற்செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
யாழ்தேவிஇணையம் தன்னுடைய சேவைஆரம்பித்த குறுகிய காலத்தில் ஒரு மைல்கல்லை எட்டியிருக்கிறது.இணைய ஊடகத்தை மற்றய ஊடகங்கSக்கும் மற்றய ஊடகப்பாவனையாளர்களை இணையத்துக்கும் அறிமுகப்படுத்தும் சவாலான பாதையில் குறிப்பிட்டளவு வெற்றிகண்டிருக்கிறோம்.
இலங்கையில்வெளியாகும் பாரிய வாசகர்வட்டத்தைக்கொண்ட 'தினக்குரல்' யாழ்தேவியுடன் கைகோர்க்க முன்வந்துள்ளது.இனி ஒவ்வொரு ஞhயிறு தினக்குரலிலும் யாழ்தேவிக்கான பக்கத்தில் எங்கள் பதிவர்களின் பதிவுகள் மின்னப்போகின்றன.அத்துடன் இலங்கையில் வெளியாகும் 'இருக்கிறம்" இருவார இதழும் யாழ்தேவிக்காக பக்கமொன்றை ஒதுக்கவும் யாழ்தேவி நட்சத்திரப்பதிவரின் தெரிந்தெடுக்கப்பட்ட ஆக்கம்ஒன்றை பிரசுரிக்கவும் முன்வந்துள்ளது.மீடியாக்களுக்காக யாழ்தேவியின் media.yaaldevi.com என்ற பகுதி புதிய பக்கம் விரைவில் அறிமுகமாகும்.
பெ.மயூரன்(வந்தியத்தேவன்)
யாழ்தேவி நிர்வாகக்குழு
ஆசிரியர்,
ஞயிறு தினக்குரல்.
வணக்கம்,
‘யாழ்தேவி’ திரட்டி, இணைய எழுத்தாளர்கள் மற்றும் தங்களின் (தினக்குரலின்) ஒத்துழைப்பு சம்பந்தமாக தங்கழுடன் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆக்கபூர்வமான சந்திப்பின் மகிழ்ச்சியுடன் இந்தக்கடிதத்தை எழுதுகிறேன். யாழ்தேவியுடன் தினக்குரல் இணைந்து இணையத்தில் எழுதும் எழுத்தாளர்களை பத்திரிகைத்துறைக்கு அறிமுகப்படுத்தும் ஆரோக்கியமான செயற்பாட்டுக்கு துணை நிற்க உறுதி அளித்தமைக்கு யாழ்தேவி சார்பிலும், அதன் நான்காயிரத்து சொச்சம் வாசகர்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு அச்சு ஊடகத்தின் துணையில்லாமல் இணைய ஊடகத்தையும், அதில் எழுதுபவர்களையும் மக்களுக்கு அறிமுகப்படுத்த அல்லது மக்கழுடன் இணைக்க முடியாதென்பதை புரிந்துகொண்டு எங்களுடன் கைகோர்த்தமைக்கு தங்களுக்கும், தினக்குரலுக்கும் நன்றிகள்.
யாழ்தேவி திரட்டி அதாவது நாங்கள் செய்யவேண்டியதை இந்தக்கடிதத்தின் மூலம் தெளிவுபடுத்தலாம் என்று நினைக்கிறேன். தினக்குரல் யாழ்தேவிக்கு ஒதுக்க முன்வந்த அரைப்பக்கத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்களை கீழே நிரல்படுத்தியிருக்கிறேன். வலைப்பூக்கள்- இணையத்தில் எம்மவர் என்ற தலைப்பின்கீழ் யாழ்தேவி நட்சத்திர பதிவரின் புகைப்படம், நட்சத்திரம் பற்றிய சிறிய அறிமுகம், அவருடைய பதிவுகள், குறித்த வாரத்தில் யாழ்தேவியில் பதியப்பட்ட ஆக்கங்களின் தொகுப்பு, யாழ்தேவியினால சிறந்த ஆக்கமாக தெரிந்தெடுக்கப்பட்ட ஆக்கம் ஒன்று. மேற்குறிப்பிட்ட ஒவ்வொன்றும் பதிவர்களை மேலும் எழுதத்தூண்டுவதாகவும், புதியவர்களை வலைப்பூக்கள் பக்கம் இழுத்து வரக்கூடியதாக காத்திரமானதாகவும், இளைமையானதாகவும் பிரசுரிக்கப்படல் வேண்டும். எங்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த கடிதத்தை நிறைவு செய்கிறேன்.

யாழ்தேவி கருவிப்பட்டி யாழ்தேவி இணையத்தளத்தால் வழங்கப்படும் மேலதிக வசதியாகும்.இதை உங்கள் வலைப்பூவில் நிறுவிக்கொள்வதின் மூலம் உங்களது வாக்குகளை யாழ்தேவி இணையத்தளத்தில் இருந்து மாத்திரமல்ல உங்களது வலைப்பூவிற்கு நேரடியாக வருபவரும் செலுத்திக்கொள்ளமுடியும்.உங்களது பதிவினை மின்னங்சலாகவும் எஸ்எம்எஸ் ஆகவும் அனுப்பும் வசதியும் இதன் மூலம் கிடைக்கிறது.உங்களது பதிவுகளை பேஸ்புக்இணையத்தளத்தில் பகிர்ந்துகொள்ளவும் இது சந்தர்ப்பத்தை வழங்குகிறது
இதனை நிறுவிக்கொள்வது மிகவும் சுலபம்.இங்கு போய் உங்களுக்கு பிடித்த நிறத்தில் கருவிப்பட்டிக்கான நிரலைப்பெற்றுக்கொள்ளுங்கள்.படத்தில் காட்டியுள்ளவாறு படிப்படியாக பின்பற்றி நிரலைநிறுவிக்கொள்ளவும்.
வேட்பிரசுக்கும் இது பயன்படுமா?
வேட்பிரசுக்கான கருவிப்பட்டி இன்னும் சோதனைநிலையிலேயே உள்ளது.இன்னும் சில தினங்களில் அல்லது ஒருவாரத்தில் அதற்கான நிரல் உருவாக்கங்கள் முடிவடைந்து யாழ்தேவியில் அறுவிக்கப்படும்.அதற்கான நிறுவல்முறைகளுகம் இங்கு அறிவுறுத்தப்படும்
யாழ்தேவியின் இந்தக்கருவிப்பட்டை எனக்குப்பிடிக்கவில்லை.சில மாற்றங்கள் வசதிகளைப்பரிந்துரைக்க விரும்புகிறேன்.நான் என்ன செய்யவேண்டும்?
இங்கு போய் உங்களது எண்ணத்தை சிறுகருத்தாய் வெளியிடுங்கள்.அது எத்தகைய கருத்தாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.
நான் ஒரு மென்பொருளாளர்
நானும் யாழ்தேவி மென்பொருள்குழுவில் இடம்பெறவிரும்புகிறேன்.நான் என்ன செய்யவேண்டும்.
பொறுமையாக இருங்கள்.இதற்கான அறிவிப்பு இன்னும் சிலவாரங்களில் அறிவிக்கப்படும்